ETV Bharat / state

கரூரில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்  ஆய்வு

கரூர்: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் குடிமராமத்துப் பணிகளை தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆய்வுசெய்தார்.

author img

By

Published : Jan 30, 2020, 3:28 PM IST

minister
minister

முதலமைச்சரின் குடிமராமத்து திட்டப் பணிகள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுவருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்திலும் இதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

அந்த வகையில், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், கரூரை அடுத்த வாங்கல் ஊராட்சி, நன்னியூர் ஊராட்சி, வேட்டமங்கலம் ஊராட்சி ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளான பசுபதிபாளையம், சேமங்கி உள்ளிட்ட இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக கிராமப்புறத்தில் இருக்கக்கூடிய வாய்க்கால்கள் அனைத்தையும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆய்வு

இந்த ஆய்வின் மூலம் அப்பகுதியில் இருக்கக்கூடிய அணைக்கட்டு சீரமைப்பு, தூர்வாருதல் போன்ற பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் அதன்பின் ஆய்வு மேற்கொண்டு அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு பணிகள் முடிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், அரசு அலுவலர்கள், அதிமுக நிர்வாகிகள், கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 'அரசைக் கண்டு ஸ்டாலின் அஞ்சுகிறார்' - அமைச்சர் கடம்பூர் ராஜு

Intro:கிராமப்புறங்களில் உள்ள வாய்க்கால் ஆய்வு மேற்கொள்ளும் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்

Body:கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் வாய்க்கால்கள் ஆய்வு மேற்கொண்டார்.

கரூரை அடுத்த வாங்கல் ஊராட்சி, நன்னியூர் ஊராட்சி, வேட்டமங்கலம் ஊராட்சி, உட்பட்ட பகுதிகளான பசுபதிபாளையம் மற்றும் சேமங்கி போன்ற இடங்களில் குறிப்பாக கிராமப்புறத்தில் இருக்கக்கூடிய வாய்க்கால்கள் அனைத்தையும் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் மூலம் அப்பகுதியில் இருக்கக்கூடிய அணைக்கட்டு சீரமைப்பு தூர்வாருதல் போன்ற பணிகள் விரைவில் துவங்க ஆய்வு மேற்கொண்டு அதை அரசு உடைய கவனத்திற்கு கொண்டு சென்று பணிகள் ஆய்வு மேற் கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் அரசு அலுவலர்கள் அதிமுக நிர்வாகிகள் கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.