ETV Bharat / state

தமிழ்நாட்டில் விரைவில் மருத்துவப்படிப்பு கலந்தாய்வு  தொடங்கும்!

author img

By

Published : Oct 30, 2020, 6:12 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு அரசாணையை நீதிமன்றத்தில் சமர்பித்து அனுமதி பெற்ற உடன், கலந்தாய்வு பணிகள் அடுத்த வாரம் தொடங்கும் என மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்பு
மருத்துவப் படிப்பு

நாட்டில் இளநிலை மருத்துப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13 மற்றும் அக்டோபர் 14ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் தேசிய தேர்வு முகமையால் அக்டோபர் 16ஆம் தேதி வெளியிடப்பட்டன.
இளநிலை மருத்துவப்படிப்பில் சேர்வதற்கு 7 லட்சத்து 71 ஆயிரத்து 500 மாணவர்கள் தகுதிப் பெற்றுள்ளனர். மருத்துவப்படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீட்டுக் கலந்தாய்வு தற்பொழுது தொடங்கி நடைபெற்று வருகின்றன.
ஆனால் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு செப்டம்பர் 15ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு ஆளுநர் அனுமதி அளிக்காமல் இருந்தார்.
இதனால் உடனடியாக அளிக்க வேண்டும் என நீதிமனத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சட்ட மசோதாவிற்கு அனுமதி கிடைக்கும் வரையில் மருத்துப்படிப்பிற்கான கலந்தாய்வு நடத்தப்படாது என உறுதி அளித்தது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப்படிப்பு இட ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் உடனே அனுமதி அளிக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டமும், பல்வேறுத் தரப்பினரும் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை நேற்று (அக்டோபர் 29) அரசு வெளியிட்டது. இந்த நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு அளிப்பதற்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று ( அக்டோபர் 30) அனுமதி அளித்துள்ளார்.
இதனையடுத்து மருத்துவப்படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்குவது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர் ஒருவர் கூறும்போது, "மருத்துவப்படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டு வழங்கு நீதிமன்றத்தில் நடந்த போது தமிழ்நாடு அரசு இட ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காமல் கலந்தாய்வு நடத்தமாட்டோம் என உறுதி அளித்திருந்தது.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கி அரசாணையும் போடப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் அனுமதியும் வழங்கி உள்ளார்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்கியதற்கான அரசாணை, ஆளுநரின் ஒப்புதல், மாணவர்களுக்கான தகவல் கையேடு ஆகியவற்றை நீதிமன்றத்தில் திங்கள் கிழமை சமர்ப்பிப்போம்.
அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உடன் மருத்துவப்படிப்பிற்கான விண்ணப்பப்பதிவு தொடங்கப்படும். அதனைத் தொடர்ந்து 10 நாட்களுக்கு பின்னர் மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வும் நடத்தப்படும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.