ETV Bharat / sports

LSG vs PBKS: பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை: புள்ளிப்பட்டியலில் முதலிடம் இடம் பிடிக்குமா லக்னோ?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறும் முனைப்பில் லக்னோ அணி களம் இறங்குகிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம் என்பதை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.

author img

By

Published : Apr 15, 2023, 3:56 PM IST

IPL MATCH TODAY
ஐபிஎல் போட்டி

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரில் இன்று (ஏப்ரல் 15) நடைபெறும் 21வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை 4 லீக் ஆட்டங்களில் விளையாடியுள்ள லக்னோ அணி, 3 வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்துள்ளது. டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு அணிகளை வீழ்த்திய அந்த அணி, சென்னை அணியிடம் தோல்வியை சந்தித்தது.

மிரட்டும் பூரன்: பெங்களூரு அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் தொடக்க வீரர்கள் ஏமாற்றினாலும், நடுவரிசை பேட்ஸ்மேன்களான ஸ்டொய்னிஸ், நிகோலஸ் பூரனின் அதிரடி ஆட்டத்தால் லக்னோ அணி அபார வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தில் 19 பந்துகளில் 62 ரன்களை விளாசிய பூரன், ரசிகர்களை கவர்ந்தார். இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 141 ரன்களை குவித்துள்ளார். இவரது விக்கெட்டை வீழ்த்த, பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். குயின்டான் டி காக்கிற்கு இன்றைய ஆட்டத்தில் வாய்ப்பு அளிக்கப்படலாம் என தெரிகிறது. கேப்டன் கே.எல்.ராகுல், தீபக் ஹூடா, குருணல் பாண்ட்யா உள்ளிட்டோர் கணிசமான ரன்களை குவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பந்துவீச்சு எப்படி?: பந்துவீச்சை பொறுத்தவரை மார்க்வுட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நடப்பு சீசனில் அவர் 9 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். ஆவேஷ் கான் முழு திறமையையும் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். எனினும், சுழற்பந்து வீச்சாளர் ரவி பீஷ்னோய் சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார். நடப்பு சீசனில் இதுவரை அவர் 6 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா, ஆடும் லெவனில் இடம்பெற்றால் அவரது அனுபவம் நிச்சயம் கைகொடுக்கும். ஆவேஷ் கான், உனத்கட் சிறப்பாக பந்துவீசினால், பஞ்சாப் அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம். இத்துடன் லக்னோ அணி சொந்த மண்ணில் களம் இறங்குவதால் அந்த அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இப்போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் லக்னோ, முதலிடத்துக்கு முன்னேறும்.

அர்பித் குலேரியா ஒப்பந்தம்: லக்னோ அணியின் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ், காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த அர்பித் குலேரியா ரூ.20 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக, லக்னோ அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சமாளிக்குமா பஞ்சாப்?: பஞ்சாப் அணியை பொறுத்தவரை, முதல் இரண்டு ஆட்டங்களில் கொல்கத்தா, ராஜஸ்தானை வீழ்த்தியது. எனினும் ஹைதராபாத், குஜராத் அணியிடம் தோல்வியடைந்தது. பேட்டிங்கை பொறுத்தவரை கேப்டன் தவான் ஃபார்மில் உள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 99 ரன்கள் எடுத்து அசத்தினார்.

மேத்யூ ஷார்ட், பனுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா ஆகியோர் நிலைத்து நின்று ஆடினால், நல்ல ஸ்கோரை எட்ட முடியும். பந்துவீச்சை பொறுத்தவரை சாம் கரன், ரபாடா நம்பிக்கை அளிக்கின்றனர். ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங் இன்னும் முயற்சித்தால், லக்னோ அணியை கட்டுப்படுத்தலாம்.

லிவிங்ஸ்டோன் அவுட்: காயம் காரணமாக இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டோன் இன்னும் ஒரு ஆட்டத்தில் கூட பங்கேற்கவில்லை. அவர் உடல் தகுதியை நிரூபிக்காததால் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவது சந்தேகம். அடுத்து வரும் ஆட்டங்களில் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளையும் ஒப்பிடும் போது லக்னோ அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. எனினும், டி20 போட்டியின் முடிவை துல்லியமாக கணிக்க முடியாது.

நேருக்கு நேர்: ஐபிஎல் தொடரில் இதுவரை லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகள் ஒரு முறை மட்டுமே மோதியுள்ளன. கடந்த சீசனில் இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் லக்னோ அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டி எங்கே?: லக்னோ - பஞ்சாப் அணிகள் மோதும் ஆட்டம் லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

லக்னோ உத்தேச அணி: குயின்டான் டி காக், கே.எல்.ராகுல் (கேப்டன்), தீபக் ஹூடா, குருணல் பாண்ட்யா, ஸ்டொய்னிஸ், நிகோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), படோனி, உனத்கட், மார்க்வுட், ரவி பீஷ்னோய், ஆவேஷ் கான்.

பஞ்சாப் உத்தேச அணி: ஷிகர் தவான் (கேப்டன்), மேத்யூ ஷார்ட், பனுகா ராஜபக்சே/பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சாம் கரன், ஷாருக்கான், ஹர்ப்ரீத் பிரார், ரிஷி தவான், ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.