ETV Bharat / sports

’ஆனந்த் பத்திரமாக நாடு திரும்புவார்’ - அருணா ஆனந்த் நம்பிக்கை!

author img

By

Published : Mar 26, 2020, 9:43 PM IST

சதுரங்கப் போட்டிகளில் ஐந்து முறை உலகச்சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் விஸ்வநாத் ஆனந்த், ஜெர்மனியிலிருந்து பத்திரமாக இந்தியா திரும்புவார் என்று அவரது மனைவி அருணா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Keeping close tab on travel advisories for safe return of Viswanathan Anand, says wife

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இதுவரை உலகம் முழுவதும் நான்கு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 22ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இந்த தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக பல்வேறு உலக நாடுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளன.

இந்நிலையில், சதுரங்க விளையாட்டுப் போட்டிகளில் ஐந்து முறை உலகச்சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் விஸ்வநாத் ஆனந்த், இம்மாதம் ஜெர்மனியில் நடைபெறயிருந்த பன்டெஸ்லிகா சதுரங்கப் போட்டிக்காக சென்றிருந்தார். பின்னர், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக அத்தொடர் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் நாடு திரும்புவதற்காக விமான நிலையம் சென்றார்.

ஆனால் பெருந்தொற்றினால் அனைத்து போக்குவரத்து சேவைகளையும் இந்தியா, ஜெர்மனி ஆகிய நாடுகள் முடக்கியுள்ளதால், அவர் அங்கேயே தங்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவருடைய மனைவி அருணா ஆனந்த் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போ அவர் கூறுகையில், ‘கரோனா தொற்று காரணமாக மிகவும் மோசமான சூழல் நிலவுகிறது. நாங்கள் அரசு கூறியுள்ள அனைத்து செயல்முறைகளையும் பின்பற்றி வருகிறேம். மேலும் ஆனந்த் அங்கு சில உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். நோய் தொற்றிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள அவர் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். நாங்கள் இரு நாட்டு அரசிடமும் அவருடைய பயணம் குறித்த விளக்கங்களைக் கேட்டறிந்து வருகிறோம். அவர் எப்போது நாடு திரும்புவது பற்றிய ஆலோசனைகளையும் மேற்கொண்டுள்ளோம்’ என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:உன் பவுலிங்க எல்லாம் நான் கண்ண மூடிட்டே அடிப்பேன்; சஹாலை கலாய்த்த பீட்டர்சன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.