ETV Bharat / briefs

10 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு பாஜக மகளிரணி இலக்கு!

author img

By

Published : Aug 25, 2020, 7:29 PM IST

திருவண்ணாமலை: பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு பாஜக மகளிரணி இலக்கு நிர்ணயித்துள்ளது.

BJP women's wings target to plant 10 thousand saplings In Thiruvannamalai

திருவண்ணாமலை செட்டி தெருவில் உள்ள அமுதா திருமண மண்டபத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மகளிரணி அறிமுக கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு மாநில பாஜக வர்த்தக அணி துணைத் தலைவர் எஸ்.தணிகைவேல் தலைமை தாங்கினார். மாநில மகளிரணி தலைவி மீனாட்சி நித்தியசுந்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மகளிரணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே சிறப்புரை ஆற்றினார்.

அப்போது, பிரதமர் மோடியின் பிறந்தநாள் வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.

சக்தி கேந்திரத்தில் உள்ள ஒவ்வொரு கிளை அளவிலும், ஒரு பூத்திக்கு 2 மகளிரணி நிர்வாகிகள் தேர்தலின் போது அமர்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மாநில பாஜக வர்த்தக அணி துணைத் தலைவராக திருவண்ணாமலையைச் சேர்ந்த தணிகைவேல் பொறுப்பேற்றதில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பாஜகவின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனை பிரதிபலிக்கும் விதமாக இன்று நடைபெற்ற மகளிர் அணி அறிமுக கூட்டத்திலும் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். கடந்த காலங்களில் நடைபெற்ற கூட்டங்களில், முன்பு எப்போதுமே மகளிர் அணியைச் சேர்ந்தவர்கள் இதுபோல் கூடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.