ETV Bharat / bharat

ஈழத்தமிழருக்கு குரல் கொடுத்த ஆயர் இராயப்பு மறைவு

ஈழத் தமிழர்களுக்காக அரும்பாடுபட்ட முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை இன்று காலமானார்.

author img

By

Published : Apr 1, 2021, 6:29 PM IST

இலங்கையில் ஈழத்தமிழருக்கு குரல் கொடுத்த ஆயர் இராயப்பு மறைவு

இலங்கையில் ஈழத்தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்த ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை காலமானார். இவர் இலங்கை ஈழத்தில் உள்ள மன்னார் மறை மாவட்டத்தில் கிறிஸ்துவ பணியில் 25 ஆண்டுகள் இறைப் பணியாற்றினார்.

மேலும், யாழ்ப்பாணம் நெடுந்தீவில் பிறந்து குருமடங்களில் கிறிஸ்துவ நெறிமுறைகளை படித்து 1967ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் குருவாக பெறுப்பேற்றார். இலங்கையில் ஈழத்தமிழர்கள் கொடூரமாக சிங்கள அரசால் தாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்காக குரல் கொடுத்தது, மட்டுமல்லாமல் அந்த துயரங்களைத் துடைக்கவும் அயராது பாடுபட்டார். மேலும், சிறையில் உள்ள தமிழ் கைதிகளைச் சந்தித்து அவர்களின் விடுதலைக்காகவும் பல்வேறு பணிகளை ஆற்றினார்.

பின்னர், போர்க்கலத்தில் வீடுகளை இழந்தவருக்கு வீடுகள் கட்டிக்கொடுத்தும், போரில் கை, கால் இழந்தவர்களுக்கு உதவிகள் செய்தும், முள்ளிக்குளத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்கு அடைக்ககலமும் கொடுத்தார். அதுமட்டுமல்லாமல், போரில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க அயராது உழைத்தார். யுத்தத்தாலும், சுனாமியாலும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஆதரவாக இல்லம் கட்டினார்.

ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வாழும் போதும், உயிர்நீத்த பின்னரும் முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை இருப்பார் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தேர்தல் பரப்புரையின் போது போக்குவரத்து தடை கூடாது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.