ETV Bharat / bharat

அரசியல் வேறுபாடுகளைக் களைந்து மக்களுக்காக ஒன்றிணைவது முக்கியம் - ஆர்யா ராஜேந்திரன்

author img

By

Published : Dec 30, 2020, 1:37 PM IST

Updated : Dec 30, 2020, 4:39 PM IST

அனைத்து அரசியல் வேறுபாடுகளையும் மீறி மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைவது தற்போது முக்கியமானது என திருவனந்தபுர மேயர் ஆர்யா ராஜேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

Youngest Mayor Arya Rajendran aims at setting aside differences for progress

திருவனந்தபுரம்: நேற்று (டிச.29) 'மீட் தி பிரஸ்' என்ற நிகழ்ச்சியின் மூலம் திருவனந்தபுரத்தில் புதிதாக மேயராகப் பதவியேற்றுக்கொண்ட ஆர்யா ராஜேந்திரன் ஊடகங்களிடம் பேசினார். அப்போது, "கவுன்சிலுக்குத் தலைமை தாங்குவதைவிட, மேயரின் பங்கு மக்கள் நலனுக்காக அனைத்து கவுன்சிலர்களையும் ஒன்றிணைப்பதாகும். பதவிகள், அதிகாரத்திற்கு அப்பால் ஒரு நல்ல அரசியல்வாதியாக இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்.

ஒரு மாணவராக, பள்ளிகளை அடையும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை உறுதிசெய்வதே இப்போது நமது முதன்மையான கடமை. தவிர, பெண்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் நலனில் கவனம் செலுத்தும் நடவடிக்கைகள், திட்டங்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தனது இளம் வயதிலேயே நிறுவன கட்டமைப்பில் பணியாற்றிய அனுபவங்கள் நிர்வாகத் திறனுக்கு உதவும். முந்தைய காலத்தில் நடைபெற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை ஆய்வுசெய்யவுள்ளேன். நகரத்தில் கழிவு மேலாண்மையால் மக்கள் படும் இன்னல்களுக்கு பொதுமக்களின் பங்களிப்புடன் தீர்வுகளை செயல்படுத்த முயல வேண்டும்.

ஆர்யா ராஜேந்திரன்

தன்னை விமர்சிப்பவர்கள் அனைவருக்கும் பொதுநலன் மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் மூலம் பொருத்தமான பதில்கள் வழங்கப்படும்.

அனைத்து அரசியல் வேறுபாடுகளையும் மீறி அனைத்து சபை உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து, மக்கள் கூட்டு கோரிக்கைகளை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்க விரும்புகிறேன்" என்றார்.

இதையும் படிங்க: 'இடதுசாரி சித்தாந்தமே சரியானது'- ஆர்யா ராஜேந்திரன் சிறப்பு பேட்டி

Last Updated : Dec 30, 2020, 4:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.