ETV Bharat / bharat

வீட்டிலிருந்தே எளிமையாக ரீசார்ஜ் செய்யலாம் - புதிய செயலியை அறிமுகப்படுத்திய ஜியோ

author img

By

Published : Apr 17, 2020, 11:07 PM IST

ஜியோ பி ஓ எஸ் லைட் எனும் செயலியை கூகிள் ப்ளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து, ஜியோ நெட்வொர்க்கில் உள்ள எந்தவொரு சந்தாதாரரின் தொலைபேசியையும் ரீசார்ஜ் செய்யும் எளிமையானத் திட்டத்தை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

jio
jio

ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் தங்களுடைய சந்தாதாரர்களின் ரீசார்ஜ் தேவைகளை எளிமைப்படுத்தும் விதத்தில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன்படி மொபைல் செயலியின் மூலம் தங்களின் தொலைத்தொடர்பு சேவையின் கீழ் உள்ள எந்த ஒரு வாடிக்கையாளரின் கணக்கையும் ரீசார்ஜ் செய்யும் வகையிலும், அதன் மூலம் நான்கு சதவிகித கமிஷனைப் பெறும் வகையிலும் புதிய வழிமுறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

கரோனா தொற்றின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தொலைத் தொடர்பு ஒழுங்கு ஆணையமான TRAI, அனைத்து ப்ரீபெய்ட் இணைப்புகளின் செல்லுபடி காலத்தையும் நீட்டிக்குமாறு நெட்வொர்க் சேவை நிறுவனங்களை முன்னதாக வலியுறுத்தி வந்தது.

தற்போது ஜியோ பி ஓ எஸ் லைட் எனப்படும் பயன்பாட்டு செயலியை கூகிள் ப்ளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து ஜியோ நெட்வொர்க்கில் உள்ள எந்தவொரு சந்தாதாரரின் தொலைபேசியையும் ரீசார்ஜ் செய்யும் வகையிலான எளிமையானத் திட்டத்தை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த செயலிக்கு 1,000 ரூபாய் இணைப்புக் கட்டணம் எனினும் அறிமுக சலுகையாக அதைத் தள்ளுபடி செய்துள்ளதாகவும் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், கடைகளுக்கு சென்று ரீசார்ஜ் செய்ய முடியாதவர்களுக்கு உதவும் வகையில் இந்த செயலி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த செயலியை இதுவரை ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பொறுப்புடன் பதிலளித்த ஹர்ஷ் வர்தன், பாராட்டிய சசி தரூர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.