ETV Bharat / snippets

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியுள்ள வழக்கறிஞர்கள் தொழில் செய்ய இடைக்கால தடை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2024, 10:25 PM IST

ஆம்ஸ்ட்ராங்
ஆம்ஸ்ட்ராங் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் ஹரிஹரன், அஸ்வத்தாமன், சிவா, ஹரிதரன் ஆகியோர் வழக்கு முடியும் வரை நீதிமன்றத்தில் தொழில் செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது.

மேலும், எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் மோதலில் ஈடுபட்டதாக வழக்கறிஞர்கள் செந்தில் நாதன், சக்தி வேல், விஜயகுமார், விமல் மற்றும் தினேஷ்குமார் ஆகிய 5 பேருக்கும் நீதிமன்றங்களில் தொழில் செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், கொலை வழக்கில் ஆயுள் தண்டணை விதிக்கப்பட்ட விழுப்புரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கோவிந்தராஜன் மற்றும் முகநூலில் ஆபாசக் கருத்துக்களை வெளியிட்டதாக திருவண்ணாமலையைச் சேர்ந்த மணியரசன் ஆகியோருக்கும் தடை விதித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.