ETV Bharat / snippets

கோவையில் நடைபெற இருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் இடமாற்றம்.. எங்கே தெரியுமா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 11, 2024, 7:08 AM IST

ஃபார்முலா 4 கார் பந்தயம் - கோப்புப்படம்
ஃபார்முலா 4 கார் பந்தயம் - கோப்புப்படம் (Credits - ETV Bharat TamilNadu)

சென்னை: கோயம்புத்தூரில் உள்ள கரி மோட்டார்ஸ் ஓடுதளத்தில் நடைபெறவிருந்த இந்தியன் ரேசிங் பெஸ்டிவல் கார் பந்தயம், சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்தியன் ரேசிங் பெஸ்டிவல், ஃபார்முலா 4 கார் பந்தயத்தின் 3வது சுற்று, சென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் வரும் செப்டம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இந்த தொடரின் 2வது சுற்றை தமிழ்நாடு அரசு SDAT மற்றும் RPPL நிறுவனங்கள் இணைந்து சென்னை தீவுத் திடலில் வெற்றிகரமாக நடத்தியது. இதன் அடுத்த பகுதியாக, 3-வது சுற்று இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் சர்வதேச கார் பந்தய ஓடுதளத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ராஸ் சர்வதேச ரேசிங் சர்க்யூட் ஓடுதளத்தின் ஒட்டுமொத்த நீளம் 3.7 கிலோ மீட்டர் ஆகும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.