உக்ரைனில் சிக்கித் தவிக்கும் வால்பாறை மாணவியை மீட்க பெற்றோர் கோரிக்கை
கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறையைச் சேர்ந்தவர் வர்ஷா. அதே பகுதியைச் சேர்ந்த சக தோழிகளான தீபிகா, மோகனா ஆகியோருடன் உக்ரைனில் மருத்துவம் படிக்கச் சென்றுள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 5 நாள்களாகப் போர் நடத்தி வருவதால் மாணவிகள் மூவரும் பதுங்கு குழிகளில் தங்கியுள்ளனர். அங்கு அவர்கள் உணவு உள்ளிட்டவை கிடைக்காமல் அவதிப்படுவதாகப் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வர்ஷா பெற்றோர் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தனது மகளுடன் சேர்ந்து அனைத்து மாணவ, மாணவிகளையும் அரசு மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST