காட்டாற்று வெள்ளத்தின் நடுவே பரிசலில் பயணிக்கும் பழங்குடியின மக்கள்..
ஈரோடு: நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் மாயாற்றில் வெள்ளம் கரைபுண்டு ஓடுகிறது. இதனால் தெங்குமராஹாட, கல்லாம்பாளையம், சித்தராம்பட்டி, அல்லிமாயாறு கிராமத்தினர் வாழை, மிளகாய், தக்காளி உள்ளிட்ட விளைப்பொருட்களை வெளிச்சந்தைக்கு கொண்டு செல்லாத முடியாத நிலை உள்ளது. இதனையடுத்து மாயாற்றின் நடுவே இன்று (ஜூலை18) ஆபத்தான முறையில் பரிசல் மூலம் விளைபொருள்களை சந்தைக்கு கொண்டு சென்றனர்.