Video:குன்னூர் அருகே கழிவுநீர்த்தொட்டியில் விழுந்த காட்டெருமை மீட்பு
நீலகிரி: குன்னூர் பகுதியின் அடர்ந்த வனங்களில் சிறுத்தை, கரடி, காட்டெருமை, யானை போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. குடிநீர் மற்றும் உணவுக்காக குடியிருப்புப்பகுதிகளில் இந்த வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்த நிலையில் அடார் எஸ்டேட் பகுதியில் காட்டெருமை ஒன்று, கால் இடறி கழிவு நீர்த்தொட்டிக்குள் விழுந்தது. இதுகுறித்து உடனடியாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலை அடுத்து விரைந்து வந்த வனத்துறை மற்றும் குன்னூர் தீயணைப்புத்துறையினர் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப்பிறகு கழிவுநீர்த்தொட்டியில் விழுந்த காட்டெருமையை உயிருடன் மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்.