கரைபுரண்டோடும் வெள்ளம்: ஆபத்தை உணராமல் செல்லும் மக்கள்
ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்கத்திலிருந்து 1000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கைவிடுத்துள்ளார். இருப்பினும் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் தரைப்பாலத்தில் நடந்தும், இருசக்கர வாகனங்களில் சென்றுவருகின்றனர். இதனால் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.