ஈகைத் திருநாள் கோலாகலமாக கொண்டாட்டம்! - ரமலான்
திண்டுக்கல்: ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முப்பது நாட்கள் நோன்பிருந்து வழிபாடுகளில் ஈடுபட்டு, தான தர்மங்களை வழங்கி திருமறை ஓதி இறை உணர்வோடு கழித்த நிலையில், நிறைவாக இந்த நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது.