தமிழ்நாடு முழுவதும் வீட்டு மனைப்பட்டா கோரி மனு கொடுக்கும் போராட்டம்!
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் மக்களுக்கு பட்டாமனை வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில், திருச்சி, திருவாரூர், ஈரோடு, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் வீட்டில் வசிக்கும் ஏழை மக்களுக்கு இலவச வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. அரசாணை எண் 318-ஐ அமல்படுத்த கோரிக்கை விடுத்தனர்.