‘தி எண்ட் ஆஃப் எரா’ ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் மறைவு!
ஒலிம்பிக் விளையாட்டு தொடரின் ஹாக்கி போட்டிகளில் மூன்று முறை இந்திய அணிக்காக தங்கப் பதக்கம் பெற்றுத் தந்த பெருமை ஜாம்பவான் பல்பீர் சிங்கையே சாரும். அதுவும் 1956ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தொடரின் போது நெதர்லாந்து அணிக்கெதிரான இறுதி ஆட்டத்தில் 6-1 என்ற கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அப்போட்டியில், இந்திய அணி சார்பாக பல்பீர் சிங் ஐந்து கோல்களை அடுத்து அசத்தியிருந்தார். இந்நாள் வரை சர்வதேச ஹாக்கி போட்டியில் தனிமனிதரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச கோல் கணக்கு இதுவாகும். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்த பல்பீர் சிங், இன்று உயிரிழந்தார். இதையடுத்து, பல்வேறு துறை பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.