உயர் நீதிமன்ற தீர்ப்பு அதிமுக சட்டத்திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி... - ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்
சென்னை: அதிமுக பொதுக்குழுவை திட்டமிட்டபடி இன்று (ஜூன் 23) நடத்தலாம் என்றும், 23 தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்றலாம் என மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் திருமாறன், இந்த தீர்ப்பு அதிமுகவின் சட்டத்திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி எனவும், 23 தீர்மானங்கள் தவிர வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற இயலாது என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST