தமிழ்நாடு

tamil nadu

புதுக்கோட்டையில் மீன் பிடி திருவிழா...

ETV Bharat / videos

கெண்டை, ஜிலேபியை அள்ளிய மக்கள்.. புதுக்கோட்டையில் களைகட்டிய மீன் பிடித் திருவிழா!

By

Published : Mar 27, 2023, 11:51 AM IST

புதுக்கோட்டை: பொன்னமராவதி அருகே உள்ள பல்வேறு கிராமங்களில் மீன் பிடி திருவிழா நடைபெற்றது. நல்ல மழை பொழிய வேண்டும் என்றும், விளைச்சல் அமோகமாக வர வேண்டும் என்பதற்காகவும், கண்மாய் ஒட்டிய பல்வேறு கிராமப் பகுதிகளில் மீன் பிடி திருவிழாவைச் சிறப்பாக நடத்துவர்.

புதுக்கோட்டை மாவட்டம் அதிக பாசன நீர் நிலைகளைக் கொண்ட மாவட்டமாகும். அங்கு, நீர்நிலைகளில் மீன்களை வளர்ப்பதும் நீர் வற்றியதும் அதனைப் பொதுமக்கள் பிடிப்பதும், மீன் பிடி திருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்குப் பின்னர், கோடைக்காலத்தில் நீர் வற்றும் சூழலில் பாசன‌கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இதனால், பொன்னமராவதி அருகே உள்ள மதியாணி கிராமத்தின் பெரிய கண்மாய்,கண்டியாநத்தம் கேசராபட்டி சித்தார்த்தங் கண்மாய்,தேனிமலை தேனிக்கண்மாய் உள்ளிட்ட கண்மாய்களில் மழை பொழிவதற்காகவும், விவசாயம் தழைக்கவும் வேண்டி மீன்பிடி திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

இந்த வருட மீன்பிடி திருவிழாவில், அதிகாலையிலேயே பொதுமக்கள் கண்மாயில் இறங்கி, பாரம்பரிய முறையில் ஊத்தா,வலை,பரி,கச்சா ஆகிய மீன்பிடி உபகரணங்களைக் கொண்டு மீன்களைப் பிடித்தனர். அதில் ஒவ்வொருவருக்கும், நாட்டு வகை மீன்களான கெளுத்தி,குரவை, ஜிலேபி,கெண்டை, அயிரை, கட்லா,விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன.

இதில்,தூரி என்ற‌ மீன்பிடி உபகரணங்களைக் கொண்டு மீன்பிடித்தவர்கள் சிறிய வகை மீன்களை அள்ளிச்சென்றனர்.மேலும், ஊர் பெரியவர்களால் வெள்ளை விடுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியைக் காண வெளியூரிலிருந்தும் பலர் கண்மாய்க்கு வந்திருந்தனர். ஜாதி,மதம் பாராமல் அனைவரும் ஒன்று கூடி இந்த மீன்பிடி திருவிழாவை, ஊர் ஒற்றுமைக்காக நடத்தினர்.

இதையும் படிங்க:கும்பக்கரை அருவில் திடீர் வெள்ளம்.. மறுக்கரையில் சிக்கிய 30 பேர் நிலை என்ன?

ABOUT THE AUTHOR

...view details