தமிழ்நாடு

tamil nadu

G Square

By

Published : Apr 24, 2023, 1:10 PM IST

ETV Bharat / videos

G Square: கோவை ஜி ஸ்கொயர் அலுவலகத்தில் வருமான வரி சோதனை!

கோவை : வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் தொடர்புடைய அலுவலகங்களில் காலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

புகாரைத் தொடர்ந்து கோவை அவினாசி சாலையில் உள்ள ஜி ஸ்கொயர் அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  கோவை மாவட்டத்தில் சேலம் - கொச்சி நெடுஞ்சாலையில் உள்ள பட்டணம் பகுதியில் ஜி ஸ்கொயர் நிறுவனம் மிகப்பெரிய அளவில் வீட்டுமனைகள் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.  

இதேபோல சிங்காநல்லூர், கண்ணம்பாளையம், நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வீட்டுமனைகள் விற்பனை செய்து வருதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம் கோவை, அவினாசி சாலையில் அமைந்துள்ளது. அந்த அலுவலகத்தில் தான் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

3 வாகனங்களில் வந்த 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதலே அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல தொழிலதிபர் மகேந்திர ராமதாஸ் என்பவர் இல்லத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.  

ABOUT THE AUTHOR

...view details