பொள்ளாச்சி: கனமழையால் மரம் விழுந்து இருசக்கர வாகனங்கள் சேதம்!
கோவை: பொள்ளாச்சியில் நேற்று(ஏப்.11) மாலை கனமழை தொடர்ந்து பெய்ததால், பொள்ளாச்சி நகராட்சிக்கு சொந்தமான இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தின் அருகில் இருந்த ராட்சத மரம் இருசக்கர வாகனத்தின் மீது விழுந்தது. இதில் 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. தகவல் அறிந்துவந்த தீயணைப்புத் துறையினர் மரத்தை அப்புறப்படுத்தினர். மரம் விழுந்த பகுதியை பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் மற்றும் ஆணையாளர் தானுமூர்த்தி சேதம் அடைந்த பகுதிகளை பார்வையிட்டனர். நகராட்சித் தலைவர் சியாமளா கூறுகையில், 'கனமழை பெய்து வருவதால் மரம் விழுந்துள்ளது. மேலும் போர்க்கால அடிப்படையில் பொள்ளாச்சி பகுதிகளில் காய்ந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவித்தார்.
TAGGED:
vehicle damage