தமிழ்நாடு

tamil nadu

வேலூரில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்

ETV Bharat / videos

வேலூரில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்; ராகுல் காந்தியின் எம்பி பதவி நீக்கத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் கண்டனம்!

By

Published : Apr 9, 2023, 10:39 PM IST

வேலூர்: ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் ஒன்றிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் லத்தேரி பேருந்து நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் மோடி அரசை கண்டிக்கும் விதமாக தீப்பந்தம் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது தீ பந்தம் ஏந்தியவாறு ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். 

இந்த ஆர்ப்பாட்டமானது முன்னாள் கே.வி. குப்பம் யூனியன் கவுன்சிலர் நீலகண்டன் தலைமையில் மாவட்ட பொதுச் செயலாளர் ஜெகநாதன் மற்றும் ஒன்றிய தலைவர் விநாயகம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தப் போராட்டத்தை மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் சித்தரஞ்சன் தொடங்கி வைத்து பேசினார். 

வேலூர் மாநகர தலைவர் டீக்காரராமன், மாவட்ட தலைவர் சுரேஷ், இளைஞர் அணி தலைவர் விக்ரம், மற்றும் காட்பாடி 1 ஆவது மண்டல குழு தலைவர் பாலகுமார் மற்றும் நிர்வாகிகள் பழனி, ராஜி, வாசு, பரந்தாமன் மற்றும் மகளிர் மகளிர் அணி உள்பட 100க்கும் மேற்பட்டோர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:ஓபிஎஸ் தலைமையிலான திருச்சி மாநாட்டுக்கு சசிகலாவுக்கு அழைப்பு!

ABOUT THE AUTHOR

...view details