உதகை மலை ரயில் பாதையில் கூட்டமாக நின்ற காட்ருமைகள்.. ரயில் ஓட்டுநர் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்ப்பு!
நீலகிரி:உதகை மலை ரயில் பாதை மேம்பாலத்தில் ரயில்கள் மிகவும் வேகம் குறைவாக இயக்கப்படுவது வழக்கம். இவை சராசரியாக 13 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்படும். பெரும்பாலும் மலைகளின் மேலும், வனப்பகுதிகளிலும், பள்ளத்தாக்குகளிலும், இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளதால் இதனை லோகோ பைலட்கள் மிக மிகக் கவனத்தோடு இயக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
இந்நிலையில் இன்று (ஜூன் 4) குன்னூரிலிருந்து உதகை புறப்பட்ட மலை ரயில் வெலிங்டன் மேம்பாலப் பகுதியில் வந்து கொண்டிருந்த போது ஒரு வளைவில் 30-க்கும் மேற்பட்ட எருமைகள் மலைப் பாதையில் கூட்டமாக நின்றிருந்தன. இதைக் கண்ட மலை ரயில் பிரேக்ஸ் மென் கணேசன் சாதுரியமாகச் செயல்பட்டு மலை ரயிலை உடனடியாக நிறுத்தினார்.
பின்னர் அவரே ரயிலிலிருந்து இறங்கி வந்து நீண்ட நேரம் போராடி அந்த எருமைகள் கூட்டத்தைத் துரத்தினார். அதன் பின் சுற்றுலாப் பயணிகளுடன் மலை ரயில் உதகைக்குப் புறப்பட்டுச் சென்றது. மேம்பாலத்தில் நின்றிருந்த எருமைகள் மீது மலை ரயில் மோதாமல் குறித்த நேரத்தில் ரயில் நிறுத்தப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதையும் படிங்க:5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுமி.. அரசு மருத்துவரின் அலட்சியம் என பெற்றோர் புகார்!