பார்வையாளர்களை கவரும் சென்டிமீட்டர் அளவிலான கிறிஸ்துமஸ் குடில்…புதுச்சேரி ஓவியர் அசத்தல்..!
Published : Dec 24, 2023, 7:24 PM IST
புதுச்சேரி:உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (டிச.25) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் புதுவையின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்துமஸ் பொருட்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது. கிறிஸ்துமஸ் முன்னிட்டு இன்று நள்ளிரவு முதல் தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெறுவது வழக்கம்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக குடில்கள் அமைப்பது, கிறிஸ்துமஸ் மரம் அலங்கரிப்பது என கிறிஸ்துமசை வரவேற்க மக்கள் தயாராகியுள்ளனர். அதைபோல புதுவையில் உள்ள தேவாலயங்களில் குடில்கள் அமைக்கப்பட்டு, கிறிஸ்துமஸ் மரம் அலங்கரிக்கப்பட்டு உள்ளதை மக்கள் ஆர்வத்துடன் கண்டு வருகின்றனர்.
கிறிஸ்துவர் அல்லாதவர்களும் தங்களது வீடுகளில் நட்சத்திரங்கள், குடில் அமைத்து மகிழ்வார்கள். இதில் பலர் வித்தியாசமான முறையில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்துள்ளனர். அதில், ஒரு பகுதியாக புதுச்சேரியை சேர்ந்த ஓவியர் சுப்பராயன் என்பவர் சென்டிமீட்டர் அளவில் கிறிஸ்துமஸ் குடிலை உருவாக்கி உள்ளார்.
மேலும், இந்த கிறிஸ்துமஸ் குடிலில் இயேசுநாதர் மாதா மற்றும் ஜோசப் திரு உருவங்களை ஒரு சென்டிமீட்டர் அளவு
களிமண்ணால் உருவாக்கி வர்ணங்கள் அடித்துள்ளார். இக்குடிலை உலக சாதனை நிகழ்வுக்கு அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ளார்.