கிருஷ்ணகிரியில் நள்ளிரவு மாவிளக்கு ஊர்வலம்: பொங்கல் பண்டிகைக்கு முன் சிறப்பு வழிபாடு
கிருஷ்ணகிரி: பெரிய முத்தூர் ஊராட்சி நாகராஜபுரம் கிராமத்தில் உள்ள 500 க்கும் மேற்பட்ட மக்கள் ஆண்டுதோறும் பொங்கலுக்கு முன்பாக வரும் செவ்வாய் கிழமை தினத்தில் மாரியம்மன், ஓம் சக்தி, அக்குமாரியம்மன், சாமி அழைப்பு நடத்தி வருகின்றனர். அந்த வழிபாட்டில் ஒருபகுதியாக நாகராஜபுரம் கிராமத்தில் இருந்து நள்ளிரவு 12 மணிக்கு மா விளக்கு ஊர்வலமும், அதன்பின் பூசாரிகளுக்கு சாமி வரவழைக்கும் நிகழ்வும் நடைபெற்றது. சாமி வந்த பூசாரிகள் கரகத்தை எடுத்துக் கொண்டு ஊருக்கு எல்லையில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் விட்டனர். சாமி கரகத்துடன் எல்லையில் இருந்து கொண்டு ஊரைக் காக்கும் என்பது ஐதீகம். இந்த நிகழ்வில் ஊர் மணியகாரர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST