தமிழ்நாடு

tamil nadu

கோழிக் கழிவுகளை கொட்டியவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

ETV Bharat / videos

கோழிக்கழிவுகளை தமிழ்நாட்டில் கொட்டிய கேரள மாநிலத்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்!

By

Published : Apr 26, 2023, 4:48 PM IST

கோயம்புத்தூர்:கேரளா மாநிலத்தில் இருந்து கடந்த இரு நாட்களுக்கு முன் கோழிக் கழிவுகள் ஏற்றி வந்த சில நபர்கள் கோயம்புத்தூர் மாவட்ட எல்லையான வாளையார் நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே கொட்டி விட்டுச் சென்றனர். இதனைக் கண்ட அப்பகுதி இளைஞர்கள் சிலர் இது குறித்து கோழிக் கழிவுகளை கொட்டிச் சென்றவரிடம் விசாரித்துள்ளனர்.

அதற்கு, கேரளாவைச் சேர்ந்தவர், இளைஞர்களை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதை அடுத்து சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக இளைஞர்களும், அப்பகுதி மக்களும் அந்த நபரிடம் கூறி எச்சரித்த நிலையில் அந்த நபர் மீண்டும் கோழிக்கழிவுகளை ஆட்டோவில் எடுத்துச்சென்றார். 

இதனிடையே இது குறித்து கே.ஜி. சாவடி காவல் துறையினருக்கு இளைஞர்கள் தகவல் அளித்தனர். இந்நிலையில் கேரளாவில் இருந்து வாகனத்தில் கோழிக் கழிவுகளை எடுத்துச்சென்று வாளையார் எல்லையில் கொட்டிய கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த ராஜு என்பவருக்கு மாவூத்தம்பதி ஊராட்சி நிர்வாகம் சார்பில் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க:மக்கள் பிரதிநிதிகள் யாரும் வராததால் ஈயாடிய அரசு விழா; தனி ஒருவனாக பங்கேற்ற அர்ச்சகர்!

ABOUT THE AUTHOR

...view details