10 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி வழியும் குளங்கள்- விவசாயிகள் மகிழ்ச்சி
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், திசையன்விளை தாலுகாக்கள் மலை மறைவு பகுதியாக இருப்பதால் பெரும்பாலும் இந்தப் பகுதி வறட்சியாகவே காணப்படும். ஆனால் இந்த ஆண்டு பெய்த வடகிழக்குப் பருவமழை காரணமாக திசையன்விளை பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட குளங்கள் 10 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிவழிகின்றன. இதனால் வரும் 2 ஆண்டுகளுக்கு குடிநீருக்கோ விவசாயத்திற்கோ கவலை இல்லை என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.