மக்களுக்குள் கலவரத்தை உருவாக்கும் கட்சி பாஜக - முத்தரசன் விமர்சனம்
விருதுநகர்: ராஜபாளையம் பகுதியில் திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “கடந்த 10 ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்த அதிமுக அரசு தேர்தல் நடத்தவில்லை. இதனால் நகராட்சி சீர்கேடு ஏற்பட்டு சாலை வசதி, கழிவுநீர் வசதி என எந்த வசதியும் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். மக்களோடு மக்களை மோதவிட்டு கலவரத்தை உருவாக்கும் கட்சியாக பாஜக இருக்கிறது” என விமர்சித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:16 PM IST