பழவேற்காடு பகுதிக்கு படையெடுக்கும் வெளிநாட்டு பறவைகள்
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் ஆண்டுதோறும் பருவமழை தொடங்கும் முன் வெளிநாட்டில் இருந்து பல்வேறு வகையான பறவைகள் வந்து செல்கின்றன. இந்த நிலையில், பழவேற்காடு பகுதியிலுள்ள ஏரியில் ஏராளமான பறவைகள் வந்து இறை தேடும் காட்சி காண்போரை கவரும் வண்ணம் உள்ளது. செங்கால் நாரை எனப்படும் பிளமிங்கோ பறவைகள் அதிகமாக பழவேற்காடு லைட் ஹவுஸ் எதிரே உள்ள ஏரியில் வந்து இறை தேடும் காட்சியை பழவேற்காடு மேம்பாலத்தில் இருந்து சுற்றுலாப் பயணிகள் கண்டு களிக்கின்றனர். நாளுக்கு நாள் பறவைகளின் வரவு அதிகமாகி வருவதால் இந்த சீசனில் பறவைகளை காண வருவோர் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.