அயோத்தி ராமர் கோயில் கட்டமைப்பு எவ்வாறு இருக்கும் தெரியுமா? - உள்ளே முப்பரிமாண காணொலி!
அயோத்தி ராமர் கோயிலுக்கு நாளை (ஆகஸ்ட் 5) பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். கங்கை, யமுனை, புராணங்களில் நம்பப்படும் சரஸ்வதி நதியிலிருந்து மண்ணும், தண்ணீரும் கொண்டு வந்து பூமி பூஜையில் பயன்படுத்தப்படும். சுமார் 161 அடி உயரத்தில் அமையவுள்ள இந்த ராமர் கோயில், மூன்று தளங்களையும் 318 தூண்களையும் கொண்டிருக்கும். இப்படி பல சிறப்புகளைக் கொண்ட இந்த ராமர் கோயிலை மூன்றரை ஆண்டுக்குள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.