பிளாஸ்டிக் கழிவுகளை அழகிய வீட்டு உபயோகப் பொருள்களாக மாற்றும் ஒடிசா பெண்!
பிளாஸ்டிக் கழிவுகளை நிர்வகிப்பது நாட்டின் பெரும் பிரச்னையாக உருவாகியுள்ள இந்தச் சூழலில், தமிழ்நாடு, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இந்நிலையில, ஒடிசாவின் தலைநகர் புபனேஷ்வரில் வசிக்கும் சைலாபாபா என்ற பெண், பிளாஸ்டிக் கழிவுகளை நிர்வகிக்க வித்தியாசமான முறையை பின்பற்றிவருகிறார். சைலாபாபா, அவரது கணவருடன் இணைந்து குப்பைக்கு செல்லவிருக்கும் பிளாஸ்டிக் பொருள்களை வீட்டு அலங்காரப் பொருள்களாக மாற்றிவருகிறார். தூக்கி வீசுவதற்கு பதில் மறுபயன்பாடு செய்ய வேண்டும் என்பதே இவரது தாரக மந்திரம்.
Last Updated : Dec 16, 2019, 6:16 PM IST