தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

இது கரோனா காலம்... கர்ப்பிணிகளே அலட்சியம் கூடாது; அச்சமும் வேண்டாம்! - Eclampsia

கரோனா காலத்தில் கர்ப்பிணிகள் உட்கொள்ள வேண்டிய உணவு பற்றியும், எக்லாம்ப்சியாவிலிருந்து (கர்ப்ப கால வலிப்பு நோய்) அவர்கள் தங்களைக் காத்துக்கொள்வதற்கான முறை குறித்தும் காணலாம்.

கர்ப்பிணி பெண்களுக்கான டிபிஸ் இதோ
கர்ப்பிணி பெண்களுக்கான டிபிஸ் இதோ

By

Published : Aug 28, 2021, 1:46 PM IST

Updated : Aug 28, 2021, 1:55 PM IST

கரோனா காலத்தில் குழந்தைகள், வயதானோர் என மக்கள் அனைவரும் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க தங்களது ஆரோக்கியத்தின் மீது அக்கறை காட்டிவருகின்றனர். இதனால் அவர்கள் தங்களின் உணவு முறைகளிலும் கவனம் செலுத்திவருகின்றனர்.

இச்சூழலில் கர்ப்பிணிகள் தங்கள் ஆரோக்கியத்தில் இரட்டிப்பு கவனம் செலுத்தி சத்துள்ள உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் வரக்கூடிய நீரிழிவு (Diabetes), உயர் ரத்த அழுத்தத்தை அலட்சியமாக எடுத்துக்கொள்ளாமல் மருத்துவரிடம் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும்.

எக்லாம்ப்சியா (Eclampsia)

எக்லாம்ப்சியா என்பது ப்ரீ-எக்லாம்ப்சியாவின் கடுமையான பாதிப்பாகும். இது கர்ப்பிணிகளைப் பாதிக்கக்கூடிய வலிப்பு நோயாகும். குழந்தைப் பேறு முடிந்த பிறகும் வலிப்பு நோய் குழந்தைக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைப் பற்றி அனைவரும் தெரிந்துகொள்வது அவசியம்.

கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்தம், வலிப்பு நோய் வர வழிவகுக்கும். இது கர்ப்பிணிகளுக்கு வரும் அரியவகை நோய். ஆனால் இந்நோய் தீவிரமானதாகும். கர்ப்ப காலங்களில் வலிப்பு ஏற்பட்டால் மூளை செயலிழக்கவும் வாய்ப்புண்டு.

மனக்குழப்பம் இல்லாமல் இருத்தல்

ப்ரீ-எக்லாம்ப்சியாவும் (Pre-Eclampsia), அறிகுறிகளும்:

ப்ரீ-எக்லாம்ப்சியா என்பது கர்ப்பிணிகளுக்கு ஏற்படக்கூடிய ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

  • ரத்த நாளங்களில் ஏற்படும் பிரச்சினைகள்
  • மூளை, நரம்பு மண்டலங்களில் பாதிப்பு
  • சமச்சீரற்ற உணவுமுறை (ஆரோக்கியமற்ற உணவுமுறையும் இதில் அடக்கம்)
  • மரபியல் பிரச்சினை
  • வயிற்று வலி
  • கடுமையான தலைவலி
  • பார்வைக் கோளாறு
  • மனநிலை மாற்றங்கள்
  • வாந்தி
  • கல்லீரல் பாதிப்பு
  • குறைந்த அளவு சிறுநீர் வெளியேறுதல்
  • உயர் ரத்த அழுத்தம் (140-க்கும் மேல்)
  • சிறுநீர் வழியாக அதிகளவு புரதம் வெளியேறுதல் (Proteinuria)
  • கை, கால், முகம் தொடர் வீக்கம்
    கர்ப்பிணிகள் உண்ண வேண்டிய உணவுகள்

ஏனெனில், சத்து குறைபாடு இருந்தாலும் குறிப்பாக கர்ப்ப காலத்தில் பெண்களுக்குத் தேவையான இரும்புச் சத்து (Iron), ஃபோலிக் அமிலம் (Folic Acid), வைட்டமின்கள் (Vit-A,C,D,E,K, Vit-B Complex (B1,B5,B12)), சுண்ணாம்புச்சத்து (Calcium) போன்ற நுண் சத்துக்கள் முக்கியமாகும்.

இந்தச் சத்துகள் குறைந்தால் அதன் அறிகுறிகளான கை, கால், முகத்தில் வீக்கம் ஏற்படும். மேலும் முகம், கண்களில் வெளிறி காணப்படும். இதனால் அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும். சோர்வாக இருப்பர்.

மேலும், ப்ரீ-எக்லாம்ப்சியா கர்ப்ப காலத்தில் ஐந்தாவது மாதத்தில் இந்தப் பிரச்சினையைக் கண்டறிய முடியும். ஏனெனில் குழந்தை வளர்ச்சியடையும் பருவமும் அதுவே. கர்ப்ப காலத்தில் ஏற்படும் மரணத்திற்கு உயர் ரத்த அழுத்தமும் ஒரு காரணமாகும். எக்லாம்ப்சியாவால் பெண்களில் சுமார் ஒரு விழுக்காடு பேர் உயிரிழக்கின்றனர்.

ப்ரீ-எக்லாம்ப்சியா காரணங்கள்

  • கருவில் இரட்டைக் குழந்தைகள், அதற்கு மேற்பட்ட குழந்தைகளைச் சுமப்பவர்கள்
  • 35 வயதுக்கு மேல் கருவுற்றிருப்பவர்கள்
  • மிக இளம் வயதில் கருவுறுதல்
  • அதிக உடல் எடை
  • நீரிழிவு நோய் உள்ளவர்கள்
  • சிறுநீரகக் கோளாறு (Urinary Track Problem)

போன்றவைகளால் இப்பிரச்சினை ஏற்படக்கூடும்.

பிரசவ காலத்தில் ஏற்படும் வலிப்புகளைச் சரிசெய்ய மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

ஆகவே கர்ப்பிணிகள் கவனமுடன் இருந்து எளிய நடைப்பயிற்சி, சத்தான உணவு வகைகள் உண்ணுதல், மருத்துவரின் அறிவுரைப்படி மருந்து உட்கொள்ளல் போன்ற அனைத்தையும் பின்பற்ற வேண்டும்.

கர்ப்பிணிகளுக்கான சில டிப்ஸ்

  • பழங்கள், காய்கறிகள் (பீட்ரூட், கேரட், வெண்டைக்காய்) ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள், நீரிழிவு அதாவது கர்ப்பகால நீரிழிவு உள்ளவர்கள் கிழங்கு வகைகளைத் தவிர்த்தல் வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி உண்ண வேண்டும்.
  • சிறுதானியங்கள், பயறு வகைகள், முளைகட்டிய பயறுகள், தினமும் ஒரு அவித்த முட்டை, கீரைகள் உண்ண வேண்டும்
  • நடைப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்
  • நன்கு தூங்க வேண்டும்
  • கர்ப்பமான முதல் மாதத்திலிருந்து இரும்புச்சத்து மாத்திரை (Iron), ஃபோலிக் ஆசிட் (Folic Acid), வைட்டமின் (Multi-Vitamins Tablets), கால்சியம் (Calcium Tablet) ஆகிய மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

உணவு முறையில் ஆரோக்கிமான காய்கறிகளாகத் தேர்ந்தெடுத்து உண்ணுதல் சாலச் சிறந்ததாகும். ஏனெனில், அதில்தான் முழு சத்தும் அடங்கியிருக்கும். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி இருந்தாலே கரோனாவிலிருந்தும், ப்ரீ-எக்லாம்ப்சியாவிலிருந்தும் பாதுகாப்பாக இருக்கலாம்.

மேலும், கரோனா விதிகளையும் பின்பற்றி மிக எச்சரிக்கையுடனும் கர்ப்பிணிகள் இருக்க வேண்டும். இவற்றை முறையாகச் செய்தாலே கர்ப்பிணிகள் உடல், மனம் தொடர்பான பிரச்சினைகளிலிருந்து ஆரோக்கியமாக மகப்பேறு அடையலாம்.

Last Updated : Aug 28, 2021, 1:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details