தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

பொடுகுத் தொல்லையை நீக்க ஈசியான டிப்ஸ்! - பேக்கிங் சோடா

முக்கியமான தலைமுடிப் பிரச்சினையான பொடுகுத் தொல்லையை, வீட்டில் உள்ள சில இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி எளிமையாக நீக்கலாம்.

Home
பொடுகு

By

Published : Jun 18, 2023, 1:50 PM IST

ஹைதராபாத்:இன்றைய இளம் தலைமுறையினருக்கு இருக்கும் முக்கியப் பிரச்னைகளில் ஒன்று பொடுகுத் தொல்லை. தலையில் உள்ள சருமத்தின் இறந்த செல்கள் உதிரும் ஒரு சாதாரண விஷயம்தான் இந்த பொடுகு. ஆனால், சிலருக்குப் பல்வேறு காரணிகளால் இந்த செயல்முறை சற்று அதிகமாக காணப்படும்.

அப்போது, தலையில் அதிகளவில் வெள்ளை நிற செதில்களாக உதிரும். இது தலை, காது, கழுத்துப் பகுதிகளிலும் பரவும். பொடுகு ஏற்படும்போது தலையில் அதிகளவு அரிப்பும் ஏற்படும். வறண்ட சருமம், ஹார்மோன்களில் மாறுபாடு, மன அழுத்தம், முறையற்ற உணவுப் பழக்கம், தலையை தூய்மையாக பராமரிக்காமல் இருப்பது போன்ற பல்வேறு காரணங்களால் இந்தப் பொடுகு ஏற்படுகிறது.

தலைமுடி உதிர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கும் இந்தப் பொடுகை தலையிலிருந்து நீக்க வேண்டும் என்றுதான் பாதிக்கப்பட்ட அனைவரும் விரும்புவார்கள். ஆனால், இந்தப் பொடுகை முழுமையாக நீக்குவது சற்று கடினம். நாம் எவ்வளவு விலை உயர்ந்த மருந்தை வாங்கிப் பயன்படுத்தினாலும், அது மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும்.

அதேநேரம், வீட்டில் கிடைக்கும் சில இயற்கையான பொருட்களை வைத்தும் பொடுகை நீக்கலாம். ஆனால், ஒவ்வொருவரது தலைமுடியும் வித்தியாசமானது என்பதால், எல்லா வைத்தியமும் எல்லோருக்கும் வேலை செய்யும் என்று கூற முடியாது. நம்முடைய சருமத்தின் தன்மை, உணவுப்பழக்கம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் நமக்கானதை தேர்வு செய்து பயன்படுத்தலாம். பொடுகை நீக்கும் சில வீட்டு வைத்தியங்களை இப்போது பார்க்கலாம்.

டீ ட்ரீ ஆயில் (Tea Tree Oil):

டீ ட்ரீ ஆயில்

டீ ட்ரீ ஆயில் எனப்படும் தேயிலை மர எண்ணெயில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது பொடுகை ஏற்படுத்தும் பூஞ்சைகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த உதவும். நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் எண்ணெய் உடன் சில துளிகள் டீ ட்ரீ ஆயிலை கலந்து தலையில் தேய்க்கலாம்.

ஆப்பிள் சிடர் வினிகர்(Apple Cider Vinegar):

ஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சிடர் வினிகர் உங்கள் தலையில் pH அளவை சீராக வைக்கவும், பூஞ்சைகளைக் கட்டுப்படுத்தவும் உதவும். தலைக்கு ஷாம்பு போட்டு கழுவிய பிறகு, ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் தண்ணீரை சம அளவு எடுத்து ஒன்றாக கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும்.

பேக்கிங் சோடா(Baking Soda):

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா தலையில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும். ஈரமான தலைமுடியில் ஒரு கைப்பிடி அளவு பேக்கிங் சோடாவை எடுத்து தேய்க்க வேண்டும். இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீர் ஊற்றி கழுவவும். பேக்கிங் சோடா பயன்படுத்தும்போது முடிக்கு கண்டிஷ்னர் பயன்படுத்துவது நல்லது.

கற்றாழை:

கற்றாழை

கற்றாழை வறண்ட சருமம், தலைமுடியை சீராக்கும். கற்றாழை தலையில் உள்ள அரிப்பு, வீக்கம், எரிச்சல் போன்றவற்றை குறைக்க உதவும். கற்றாழையை நேரடியாகவோ அல்லது ஜெல்லாகவோ பயன்படுத்தலாம். கற்றாழை ஜெல்லை(Aloe Vera gel) தலையில் தேய்த்து, சுமார் 30 நிமிடங்களுக்குப் அப்படியே விட்டுவிட வேண்டும். அதன் பிறகு தலைமுடியைக் கழுவ வேண்டும்.

தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் ஒரு இயற்கையான மாய்ஸ்சரைசர் (Moisturizer) ஆகும். இது தலையில் ஏற்பட்ட வறட்சி, அரிப்பை போக்க உதவும். தேங்காய் எண்ணெய்யை லேசாக சூடேற்றி, வெதுவெதுப்பாக இருக்கும்போது தலையில் ஊற்றி மசாஜ் செய்ய வேண்டும். சுமார் 30 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, வழக்கம்போல் குளிக்கலாம்.

இதையும் படிங்க: புதிய காதலியிடம் நல்ல பேரு எடுக்க இதை எல்லாம் செய்யாதீங்க..!

ABOUT THE AUTHOR

...view details