டெல்லி: நடிகர் அர்ஜுன் கபூர் சமீபத்தில் டயட் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவு, டயட் ஃபுட் மற்றும் ஜங்க் ஃபூட் இடையேயான வேறுபாடுகளை விளக்கும் வகையில் இருந்தது. மேலும் உணவு பழக்கத்தை எப்படி ஆரம்பித்து எப்படி முடிப்பது போன்று வரையறுக்கப்பட்டுள்ளது.
வாரம் முழுவதும் டயட் ஃபுட் உட்கொண்டு, வாரயிறுதியில் ஒரு நாள் ஜங்க் ஃபுட் எடுத்தல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படாது. மேலும் நோய்வாய்ப்படாமல் இருக்க, உங்கள் தட்டில் சத்தான தானியங்கள், கடல் உணவுகள், பீன்ஸ் மற்றும் பருப்புகளைக் கொண்டு நிரப்ப வேண்டும். வாரம் முழுவதும் நீங்கள் சாப்பிட வேண்டிய சில உணவுகளின் பட்டியல் இதோ...
பச்சை காய்கறிகள்:ஒவ்வொரு வாரமும் மூன்று முதல் நான்கு முறை பச்சை காய்கறிகளை உட்கொள்ளுங்கள். ப்ரோக்கோலி, மிளகுத்தூள், பிரஸ்ஸல் முளைகள், பரட்டைக்கீரை மற்றும் பசலைக்கீரை போன்றவை தினசரி உணவில் இருக்க வேண்டும்.
முழு தானியங்கள்:ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது முழு தானியங்களை உட்கொள்ளுங்கள். கோதுமை, கம்பு, ஓட்ஸ், பார்லி, தண்டு கீரை விதைகள் மற்றும் கினோவா ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும்.
பீன்ஸ் மற்றும் பருப்பு:வாரத்திற்கு ஒரு முறையாவது, பீன்ஸ் சார்ந்த உணவை சாப்பிட முயற்சி செய்யுங்கள். பீன்ஸ் மற்றும் பருப்பு போன்ற வகைகளை சூப், கேசரோல், சாலடு ஆகியவற்றில் சேர்த்து உட்கொள்ளவும்.