ஹைதராபாத்: மழைக்காலத்தில் ஒரு சூடான தேநீர் உங்களை வசதியாக உணர வைப்பது மட்டுமல்லாமல், அது உங்கள் உடல் வெப்பநிலையை சீராக்கவும் உதவுகிறது. மேலும் பருவ மழைக் காலத்துடன் தொடர்புடைய ஒவ்வாமை மற்றும் சளிக்கு எதிர்வினை ஆற்றுகிறது. குறிப்பாக மழைக்காலத்தில், தேநீர் அல்லது நாம் அன்புடன் டீ என குறிப்பிடுவது, சந்தேகத்திற்கு இடமின்றி தேசிய விருப்பமாக மட்டுமல்லாமல், நம் வாழ்வின் குறிப்பிடத்தக்க பகுதியாகவும் விளங்கி வருகிறது.
சூடான தேநீரைப் போல ஆறுதல் தரும் பானம் எதுவும் இல்லை. உங்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும் பல்வேறு வகையான தேயிலைகளை ரசிக்கப் பருவமழை சரியான காலகட்டமாக உள்ளது. மழைக்காலத்தில் நீங்கள் முயற்சி செய்யக்கூடிய சில தேநீர் வகைகளைப் பற்றி, இனி விரிவாகக் காண்போம்...
இஞ்சி டீ:பருவமழை காலத்திற்கு ஏற்ற சிறந்த பானமாக, இஞ்சி டீ விளங்கி வருகிறது. இது ஒவ்வாமையைத் தவிர்க்கவும், தொண்டையில் ஏற்படும் தொந்தரவில் இருந்து விடுபடவும், ஜலதோஷத்திற்கு சிகிச்சையளிக்கவும் உதவுகிறது. கூடுதலாக, மழைக்காலத்தில் அடிக்கடி ஏற்படும் வயிறு தொடர்பான பிரச்னைகள் மற்றும் செரிமானத்திற்கு இஞ்சி தேநீர் உறுதுணை புரிகிறது.
சாமந்திப்பூ டீ:இந்த தேநீர், அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள் இரண்டையும் கொண்டதாகக் கருதப்படுகிறது. இது மழைக்காலத்தில் ஏற்படும் கடுமையான தோல் பாதிப்புகள் மற்றும் சளி, காய்ச்சல், வைரஸ் தொற்று போன்ற பல தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதில், சாமந்திப்பூ டீ முக்கியப் பங்காற்றுகிறது.