சென்னை:தினமும் தலைக்கு குளித்தால் தலைமுடி கொட்டிவிடும், எண்ணெய் தடவாமல் விட்டால் கொட்டிவிடும் என்று பல கட்டுக் கதைகளை உண்மையென நம்பியிருப்போம். அப்படி பரவிய 9 கட்டுக்கதைகள் மற்றும் அதன் உண்மைகள் குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
- கட்டுக்கதை 1: தினமும் தலைக்கு குளித்தால், முடி உதிர்வு ஏற்படும்.
உண்மை:தினமும் தலைக்கு குளிப்பதால் முடி கொட்டிவிடாது. நாள்தோறும் வெளியில் செல்லும்பட்சத்தில் முடியில் மாசு படிந்துவிடும். அதனால் தினமும் தலைக்கு குளிக்கலாம் அல்லது தண்ணீரில் கழுவலாம். ஆனால், தொடர்ந்து சுடு தண்ணீரை பயன்படுத்தக்கூடாது. முடிக்கு சல்பேட் இல்லாத மைல்டு ஷாம்பூவைப் பயன்படுத்த வேண்டும்.
- கட்டுக்கதை 2:கோடையில் ஹேர் கண்டிஷனரைப் பயன்படுத்தினால் முடி வேர்களில் சுரக்கும் எண்ணெய் பசையாகும்.
உண்மை:கோடை காலத்தில் அதிகப்படியான வெயில் மற்றும் நீச்சல் குளங்களின் குளிக்கும்போது குளோரின் காரணமாக முடி வறண்டு சேதமடைகிறது. இந்த நேரத்தில் ஹேர் கண்டிஷனரைப் பயன்படுத்தலாம். வெளியில் செல்லாதப் பட்சத்தில் தேவைப்பாடாது.
- கட்டுக்கதை 4: கோடைக்காலத்தில் முடிக்கு எண்ணெய் பயன்படுத்தினால் பிசுபிசுப்பு ஏற்படும், வேர்களை அடைக்கும்.
உண்மை:முடி வேர்களில் சேதம் ஏற்படுவதைத் தடுக்க, எண்ணெய் பயன்படுத்துவது பாதுகாப்பானதாகும். அப்போது, முடி மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும். சொல்லப் போனால், எண்ணெய் பயன்படுத்துவது முடியை உள்ளே இருந்து வலுப்படுத்துகிறது.
- கட்டுக்கதை 5:அடிக்கடி உங்கள் ஷாம்பு மற்றும் கண்டிஷனரை மாற்றக் கூடாது.
உண்மை: உங்கள் ஷாம்பு அல்லது கண்டிஷனரை மாற்றுவது என்பது நீங்கள் வசிக்கும் இடம் மற்றும் காலநிலையை பொறுத்தது. அதற்கேற்ப தோல் மருத்துவரின் ஆலோசனையின்படி பொருத்தமான ஷாம்பு மற்றும் கண்டிஷனரை மாற்றிப் பயன்படுத்தலாம்.
- கட்டுக்கதை 6:முடிக்கு எண்ணெய் தடவினால் பொடுகு சரியாகிவிடும்.