ஹைதராபாத்: நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கடும்குளிர் வாட்டி வதைக்கிறது. குளிர்காலம் வரும்போது, அதனோடு காய்ச்சல், சளி, ஜலதோஷம், ஜீரணக்கோளாறு, சருமப்பிரச்னைகள் உள்ளிட்டவற்றையும் உடன் அழைத்து வருவது வழக்கம். குளிர்காலத்தில் வைரஸ் காய்ச்சல்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த நோய்களைத் தவிர, குளிருக்கு இதமான உணவுகளை சாப்பிடவும் நமக்கு க்ரேவிங் ஏற்படும். இந்த நிலையில், குளிர்கால நோய்களை எதிர்கொள்ள உதவும் சில உணவு மற்றும் பழக்க வழக்கங்கள் குறித்து பார்க்கலாம்...
இஞ்சி டீ:குளிர்காலத்தில் டீ, காபி போன்ற சூடான பானங்ளை குடிக்கலாம். குறிப்பாக இஞ்சி, ஏலக்காய் போட்ட டீ குடிப்பது சிறந்தது.
இந்த டீயில் இருக்கும் இஞ்சி குடிப்பவர்களுக்கு புத்துணர்வு அளிக்கும்.
சூப்:சூப் வகைகள் சிலருக்கு பிடிக்கலாம், சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், குளிர்காலங்களில் தவறாமல் சூப் குடிப்பது நல்லது.
தக்காளி சூப், சிக்கன் சூப், மட்டன் சூப் உள்ளிட்ட சூப் வகைகள் குளிர்கால நோய்கள் வராமல் தடுக்கும்.