விருதுநகர் அருகே முதலிபட்டி சதானந்தபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த 15இல் வெடி விபத்து ஏற்பட்டது. அதில் ஆதிலட்சுமி (34) என்பவர் உயிரிழந்தார்.
விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழப்பு அதிகரிப்பு - பட்டாசு ஆலை வெடி விபத்து
விருதுநகர்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.
பட்டாசு ஆலை விபத்து
மேலும் காயமுற்ற செந்தில், முத்துமாரி, சுந்தரபாண்டி ஆகியோர் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதில் சுந்தரபாண்டி என்பவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. மற்ற இருவரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சையில் உள்ளனர்.