தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: தலைமறைவாக இருந்த ஆலை உரிமையாளர் கைது

விருதுநகர்: அச்சங்குளம் பட்டாசு ஆலை வெடி விபத்து விவகாரத்தில் தலைமறைவாக இருந்த ஆலை உரிமையாளர் சந்தன மாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆலை உரிமையாளர் கைது
ஆலை உரிமையாளர் கைது

By

Published : Feb 18, 2021, 9:47 AM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவருக்குச் சொந்தமான மாரியம்மாள் பட்டாசு ஆலை இயங்கிவருகிறது.

இங்கு பிப்.12ஆம் தேதி ஏற்பட்ட வெடி விபத்து விவகாரத்தில் தலைமறைவாக இருந்த ஆலை உரிமையாளர் சந்தன மாரியை ஏழாயிரம்பண்ணை காவல் துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்தனர். மேலும், 36 பேர் உடலில் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details