மாநிலத்தில் சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, விருதுநகர் மாவட்டத்தில் தொற்று பரவல் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. இன்று ஒரே நாளில் 286 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழாயிரத்து 865 ஆக இருந்ததிலிருந்து, எட்டாயிரத்து 151 ஆக அதிகரித்துள்ளது.
விருதுநகரில் எட்டாயிரத்தைக் கடந்த கரோனா பாதிப்பு
விருதுநகர்: மாவட்டத்தில் இன்று(ஆக.1) புதிதாக 286 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை எட்டாயிரத்து 151ஆக அதிகரித்துள்ளது.
virudhunagar district crossed eight thousands corona positive cases
இதுவரை மாவட்டத்தில் ஆறாயிரத்து 41 பேர் நோய் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், இரண்டாயிரத்து 20 பேர் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் போன்ற பகுதியில் உள்ள சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இத்தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று ஒரு நாளில் மட்டும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது.