தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோத்தபய ராஜபக்ச வருகைக்கு விசிக எதிர்ப்பு -திருமாவளவன்

விருதுநகர்: கோத்தபய ராஜபக்ச இந்தியா வருவதை எதிர்த்து விசிக சார்பில் நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

vck leader thirumavalavan

By

Published : Nov 22, 2019, 7:20 PM IST

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அmப்போது, "உள்ளாட்சித் தேர்தலில் மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கு அதிமுக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது தடுமாற்ற நிலையையும், அச்சப்போக்கையும் காட்டுகிறது. மறைமுக தேர்தல் முறை ஆள்கடத்தல், குதிரை பேரம் போன்ற ஊழல் நடவடிக்கைகளுக்கு இடம் கொடுக்கும்.

எனவே, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அவசர சட்டத்தை ரத்து செய்து பழைய நடைமுறை போன்றே நேரடித் தேர்தல் மூலம் மேயரை தேர்ந்தெடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

கோத்தபய ராஜபக்ச இந்தியா வருவதை தமிழ் சமூகத்தின் உணர்வுகளை அலட்சியப் படுத்துவதாக காயப்படுத்துவதாக அமையும். இந்த வருகையை எதிர்த்து விசிக சார்பில் நாளை சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் தொடர்பான வழக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. மாணவியின் குடும்பத்திற்கு நீதி கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழ்நாடு அரசு இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள், அடக்குமுறைகள் நிகழுகின்றன. இதனால், ஏராளமானோர் தற்கொலை செய்யும் நிலை உருவாகிறது. மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த குழு ஒன்றை உருவாக்க வேண்டும். விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்.

நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும்

முதலமைச்சர் அனைவருக்கும் பொதுவானவர் என்பதால் மக்கள் பிரச்னைகளை மட்டுமே அவரிடம் பேசினேன். இதில் அரசியல் ஏதும் இல்லை.‌ பாபர் மசூதி தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதற்கு என் மீது போடப்பட்டுள்ள வழக்கை சட்ட ரீதியாக சந்திப்பேன்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

ABOUT THE AUTHOR

...view details