விருதுநகர் மாவட்டம், மேலமாத்தூரைச் சேர்ந்த விவசாயி நச்சான்(46). இவர் பட்டா மாறுதலுக்கு மேலமாத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அவருக்கு பட்டா மாற்றுதல் செய்து தர, மேலமாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் ஆம்ஸ்ட்ராங், ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதை நச்சான் தர மறுத்துள்ளார். மீண்டும் ரூ.7 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால்தான் பட்டா மாறுதல் செய்து தருவதாக ஆம்ஸ்ட்ராங் திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனவே, இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு நச்சான் தகவல் கொடுத்துள்ளார்.
பட்டா மாறுதலுக்கு ரூ.7 ஆயிரம் லஞ்சம்; 'நேர்மை' விஏஓ கைது!
விருதுநகர்: பட்டா மாறுதலுக்காக ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் ஆம்ஸ்ட்ராங் என்பவரை, லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்துள்ளது.
இதையடுத்து, ரசாயனம் தடவிய நோட்டை ஆம்ஸ்ட்ராங்கிடம் அளிக்கும்படி லஞ்ச ஒழிப்புத்துறையினர் நச்சானிடம் கொடுத்துள்ளனர். அந்த பணத்தை ஆம்ஸ்ட்ராங்கிடம் வழங்கியபோது, அருகில் மறைந்திருந்த பூமிநாதன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறையினர், ஆம்ஸ்ட்ராங்கை கையும் களவுமாக பிடித்தனர். இதுகுறித்து, மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கடந்த 2014ஆம் ஆண்டு ரூ.3500 லஞ்சம் வாங்கியதற்காக ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு சென்று பணி செய்ய ஆணை பெற்று திரும்ப பணிக்கு திரும்பியுள்ளார். ருசி கண்ட பூனை நிற்காது என்பதுபோல, தற்போது லஞ்சம் வாங்கி மீண்டும் ஆம்ஸ்ட்ராங் சிக்கியுள்ளார்.