தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 18, 2020, 7:51 PM IST

Updated : Oct 27, 2020, 5:39 PM IST

ETV Bharat / state

தனிமனித தவறுகளால் பாதாள சாக்கடை திட்டம் பாதிக்கிறது - நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி!

விருதுநகர்: தனி மனித தவறுகளால் தான் பாதாள சாக்கடை திட்டத்தில் அவ்வப்போது பிரச்னை ஏற்படுகிறது என விருதுநகர் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி கூறினார்.

vnr
vnr

விருதுநகரில் பருவமழைக்கு முன்பாக நகராட்சி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பல்வேறு பராமரிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சாலைகள் சீரமைப்பு, பாதாள சாக்கடை திட்டம், நகராட்சி கட்டடங்கள் புனரமைப்பு போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இவை, நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டுமின்றி நெடுஞ்சாலைத்துறை மூலம் சீரமைக்கப்படும் சாலைகளில் பாதாள சாக்கடை திட்டம் போன்றவை செயல்படுத்தப்பட்டு வருவதால், ராமமூர்த்தி ரோடு, ஐ.சி.ஏ காலனி மற்றும் மல்லாங்கிணறு சாலை பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மற்றும் கனரக வாகனங்களால் காற்று மாசுபாடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுதொடர்பாக விருதுநகரை சேர்ந்த முருகன் கூறுகையில், நகராட்சிக்குட்பட்ட பகுதிகள் மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழைக்காலங்கள் நெருங்கிய நிலையில் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருவது பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது.

தனிமனித தவறுகளால் பாதாள சாக்கடை திட்டம் பாதிக்கிறது

மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே இப்பணிகளை தொடங்கியிருக்க வேண்டும். நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக முழுமையடையாமல் தற்போது வரை நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது" என்றார்.

ரமேஷ் குமார் கூறுகையில், "40 ஆண்டுகளுக்கு மேலாக விருதுநகரில் வசித்து வருகிறோம். நகராட்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலை சீரமைக்கும் பணி நடப்பதால், மாற்றுப்பாதையில் வரும் வாகனங்களால் அதிகளவிலான தூசியின் காரணமாக காற்று மாசுபாடு ஏற்படுகிறது.

பாதாள சாக்கடை திட்டத்திற்கு பயன்படுத்தும் குழாயின் அளவில் சிறியதாக இல்லாமல் பெரியதாக பயன்படுத்தினால் விரைவாக பாதாள சாக்கடை நிறையாமல் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்கும்" என்றார்.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி கூறுகையில், விருதுநகர் நகராட்சி அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் மழைக்காலங்களில் மழைநீர் தெருக்களிலும், வீடுகளிலும் தங்கி விடக் கூடாது என்பதற்காக வாறுகால் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. நகராட்சி முழுவதும் 85 விழுக்காட்டிற்கும் மேலாக பாதாள சாக்கடை திட்டம் முடிவடைந்துள்ளது.

இரண்டாம் கட்டமாக மீதமுள்ள பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் நடப்பதற்கான ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

சாலை பணிகளைப் பொறுத்தவரை 14ஆவது நிதிக் குழுவின் திட்டத்தின்படி 90 விழுக்காடு வேலைகள் முடிந்துள்ளன. பாதாள சாக்கடைகள் அடைப்பு ஏற்படுவதற்கு தனிமனித விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதே முக்கிய காரணமாகும்.

பொதுமக்கள் குப்பைகளை பாதாள சாக்கடைகளில் போடுவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு பொதுமக்கள் நடந்து கொண்டால் 100 விழுக்காடு பாதாள சாக்கடை திட்டம் வெற்றி பெறும். தனி மனித தவறுகளால் பாதாளசாக்கடை திட்டத்தில் அவ்வப்போது பிரச்னை ஏற்படுகிறது" என்றார்.

இதையும் படிங்க:கர்நாடகாவில் கனமழை; பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள உள்கட்டமைப்பு!

Last Updated : Oct 27, 2020, 5:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details