விருதுநகர் அரசு உதவி பெறும் பள்ளியில், மாவட்ட ஹாக்கி அசோசியேஷன் சார்பாக நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கிப் போட்டி இன்று தொடங்கியது. சப் ஜூனியர் மாணவர்களுக்கான மாநில அளவிலான ஹாக்கிப் போட்டியை அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர் தொடங்கி வைத்தார்.
இப்போட்டியில் கோவை, சிவகங்கை, மதுரை, தேனி, சென்னை, கன்னியாகுமரி, நாகர்கோவில் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 31 அணிகள் பங்கேற்றுள்ளன. மேலும் இப்போட்டிகள் நாக்-அவுட் முறையில் நடைபெற உள்ளது.
இன்று தொடங்கிய இந்த ஹாக்கிப் போட்டியின் இறுதி ஆட்டம் வருகின்ற திங்களன்று நடைபெற உள்ளது. இதையடுத்து வெற்றி பெறும் அணிகளுக்கு சுழற் கோப்பையும், சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன.
இத்தொடரில் தேர்வாகும் 15 சிறந்த வீரர்கள் தமிழ்நாடு சப் ஜூனியர் அணி சார்பாக இந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளார்கள் எனப் போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான ஹாக்கிப் போட்டி இதையும் படிங்க: 2 ஆண்டுகளுக்குப் பின் கோப்பையுடன் கம்பேக் தந்த சானியா மிர்சா