மார்ச் 3ஆம் தேதி பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜவர்மன் ஆகியோர் இடையிலான உள்கட்சி பூசல் விவகாரம் தொடர்பாக வார இதழ் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. செய்தி வெளியானதை அடுத்து, அந்த வார இதழின் நிருபர் கார்த்தி என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார். படுகாயமடைந்த அவர், தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
பத்திரிகையாளர் தாக்கப்பட்ட விவகாரம்: திமுக எம்எல்ஏக்கள் ஆட்சியரிடம் மனு
விருதுநகர்: சிவகாசியில் பத்திரிகையாளரைத் தாக்கியதற்கு கண்டனம் தெரிவித்து திமுகவினர் சார்பில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வலியுறுத்தி மனு அளித்தனர்.
இச்சம்பவத்திற்கெதிராக பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துவருகின்றன. இதில் விருதுநகர் மாவட்ட திமுக சார்பாக அருப்புக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், திருச்சுழி சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு, ராஜபாளையம் சட்டப்பேரவை உருப்பினர் தங்கபாண்டியன் உள்ளிட்டோர் சார்பில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.
இதையும் படிங்க:அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஹெச். ராஜா உருவப்படம் எரிப்பு!