விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஒன்றாவது, இரண்டாவது வார்டு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டம், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படவில்லை எனத் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். குறிப்பாக, மழை காலங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி இருப்பதால், துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது எனத் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
விருதுநகரில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!
விருதுநகர்: ராஜபாளையத்தில் பல்வேறு அரசு திட்டங்களுக்காக தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படாமல் இருப்பதாக நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
இந்நிலையில் இன்று, அரசு திட்டங்களுக்காக சாலைகளில் தோண்டப்பட்ட குழிகளை உடனடியாக மூடக்கோரி ஒன்றாவது, இரண்டாவது வார்டு பகுதி பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.