தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மோடி நினைத்தால் பஸ்பமாகிவிடுவீர்கள்!' - திமுகவை சீண்டும் கேடிஆர்

விருதுநகர்:  மத்திய அரசிடம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரணடைந்துவிட்டனர் எனவும், மோடி நினைத்தால் திமுக கட்சி பஸ்பமாகிவிடும் எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம் செய்துள்ளார்.

minister rajenthira balaji

By

Published : Jul 22, 2019, 1:49 PM IST

Updated : Jul 22, 2019, 2:57 PM IST

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் காமராஜர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், "வேலூர் தொகுதி திமுகவின் கோட்டை என்பது போன மாசம், இப்போ அதிமுகவின் எஃகு கோட்டையாக உள்ளது. திமுகவின் கோட்டை இப்போ ஓட்டையாகிவிட்டது.

வேலூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுகவிற்கு சரியான அடி கொடுப்போம். திமுக எங்களிடம் வலுவாக மாட்டிக் கொண்டது. இதேபோல் வரும் தேர்தல்களிலும் திமுகவிற்கு மக்கள் சம்மட்டி அடிகொடுத்து வீட்டிற்கு அனுப்புவார்கள்.

மேலும், திமுகவின் கட்டுப்பாடு உதயநிதி ஸ்டாலின், சபரீசன் கையில்தான் உள்ளது. அவர்கள் இருவரும் பாடச் சொன்னால் மு.க. ஸ்டாலின் பாடுவார்; ஆடச் சொன்னால் ஆடுவார்.

டிடிவி தினகரன் சசிகலாவை சிறை தண்டனையிலிருந்து சட்டரீதியாக வெளியில் கொண்ட வந்தால் அது மகிழ்ச்சி. அதேபோல் சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தாலும் ஆட்சியில் எந்த மாற்றமும் இருக்காது ஏமாற்றமே இருக்கும்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் எதிரிகள் அவரது நிழலைக்கூட அணுக முடியாது. எங்களது ஆட்சி குறித்து விமர்சனம் செய்துவரும் எதிர்க்கட்சிகளுடன் மேடை போட்டு விவாதிக்க நாங்கள் தயார்" எனத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, தேசிய கல்விக் கொள்கை பற்றிய நடிகர் சூர்யாவின் கருத்து குறித்த கேள்விக்கு, நல்ல கருத்தை நடிகர் சூர்யா மட்டுமல்ல, யார் சொன்னாலும் அதை முதலமைச்சர் ஏற்றுக் கொள்வார் என பதிலளித்தார்.

தற்போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டை பாதிக்கும் திட்டங்களை எதிர்த்து நாடாளுமன்றத்தில் கூக்குரல் கொடுக்காமல், மத்திய அமைச்சர்களுடன் கை குலுக்கிவிட்டு ஒரே இலையில் உணவு அருந்திவிட்டு வருவதாக விமர்சனம் செய்த ராஜேந்திர பாலாஜி, இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் மத்திய அரசிடம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரணடைந்து விட்டனர் என்பதை காட்டுகிறது என்றார்.

திமுகவின் 37 நாடாளுமன்ற உறுப்பினர்களும் டெல்லியில் மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்காமல் பரோட்டாவிற்கு மாவு பிசைந்துகொண்டு இருக்கிறார்களா? எனக் கேள்வி எழுப்பினார்.

திமுக, மோடி

தமிழ்நாட்டில் எட்டு வழிச்சாலை வேண்டாம் என தயாநிதி மாறன் இங்கே கூறிவிட்டு நாடாளுமன்றத்தில் எட்டு வழிச்சாலை வேண்டும் எனக் கூறுவதாக குற்றம்சாட்டிய ராஜேந்திர பாலாஜி, பிரதமர் மோடி நினைத்தால் திமுக கட்சி பஸ்பமாகிவிடும் என எச்சரித்தார்.

Last Updated : Jul 22, 2019, 2:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details