தமிழ்நாடு

tamil nadu

முதியவரிடம் செயின் பறிப்பு; அரசு ஊழியர் உட்பட 7 பேரை 20 மணிநேரத்தில் கைதுசெய்த போலீஸார்!

விருதுநகரில் வீட்டு வாசலில் இருசக்கர வாகனத்தை நிறுத்திக்கொண்டிருந்த முதியவரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட அரசு ஊழியர் உட்பட 7 பேரை 20 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.

By

Published : Jul 26, 2022, 10:59 PM IST

Published : Jul 26, 2022, 10:59 PM IST

முதியவரிடம் செயின் பறிப்பு; அரசு ஊழியர் உட்பட 7 பேர் கைது
முதியவரிடம் செயின் பறிப்பு; அரசு ஊழியர் உட்பட 7 பேர் கைது

விருதுநகர்:லட்சுமி நகரைச் சேர்ந்தவர் கந்தசாமி (72). நேற்று மதியம் வீட்டு வாசல் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியபொழுது இவரைப்பின்தொடர்ந்து காரில் வந்த மூன்று நபர்கள் அவரைத்தாக்கிவிட்டு கழுத்தில் அணிந்திருந்த 16 சவரன் தங்க செயினை கொள்ளையடித்துச்சென்றனர்.

இதுகுறித்து ஊரக காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அருகில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து காவல் துறையினர் நான்கு தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கார் யாருடையது என்பது குறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கார் விருதுநகரைச் சேர்ந்த தனியார் டிராவல்ஸ் நடத்தி வரும் ராஜ்குமார் என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரிய வந்தது.

காவல் துறையினர் ராஜ்குமாரிடம் விசாரணை நடத்தியபோது சனிக்கிழமை விருதுநகர் தீயணைப்புத்துறையில் பணிபுரியும் திருப்பதி என்பவர் வாடகைக்கு காரை எடுத்துச்சென்றது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து திருப்பதியிடம் நடத்திய விசாரணையில் திருப்பதி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் அழகர் ஆகிய மூவரும் இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

பின்னர் அந்த 3 நபர்களிடம் நடத்திய விசாரணையில் திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களுடன் கருப்பு, சதீஷ்குமார், மகாலட்சுமி, ஈஸ்வரன் ஆகிய நான்கு நபர்கள் கூட்டாக செயல்பட்டது தெரியவந்தது. இச்சம்பவம் நடந்து 20 மணி நேரத்திற்குள்ளாக திருட்டுச்சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரைக் கைது செய்து அவர்களிடம் இருந்த நகையையும் காவல் துறையினர் மீட்டனர்.

முதியவரிடம் செயின் பறிப்பு; அரசு ஊழியர் உட்பட 7 பேர் கைது

இதையும் படிங்க:மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும் தற்கொலைகள் - குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் கூறுவது என்ன?

ABOUT THE AUTHOR

...view details