தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கை மீறிய இறைச்சி கடைகளுக்கு சீல்!

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு உத்தரவை மீறி, நாகை, ஈரோடு, விருதுநகர், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் திறக்கப்பட்டிருந்த இறைச்சிக் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டது.

Meat shops fined for violating curfew
Meat shops fined for violating curfew

By

Published : Aug 23, 2020, 4:29 PM IST

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்திடும் வகையில் தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் எவ்வித தளர்வுமின்றி, முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆகஸ்ட் மாதத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமையான இன்று (ஆக.23) எவ்வித தளர்வுகளுமின்றி மநிலம் முழுவதும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே ஈரோடு மாவட்டம் கிருஷ்ணம்பாளையம் சாலைப் பகுதியில் அரசின் விதிமுறைகளை மீறி இறைச்சி விற்பனை செய்து வந்த 10க்கும் மேற்பட்ட இறைச்சிக் கடைகளுக்கு, மாவட்ட நிர்வாகம் அபராதம் விதித்து, சீல் வைத்தது.

அதேபோல் நாகை மாவட்டம் புத்தூர் ரவுண்டானா அருகே ஊரடங்கை மீறி மீன் வியாபாரம் நடைபெறுவதாக நாகை நகர காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், ஊரடங்கு உத்தரவை மீறி மீன் விற்பனை செய்த கடைகளுக்கு சீல் வைத்தும், சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான மீன்களை பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதேபோல், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஊரடங்கு விதியை மீறி செயல்பட்டு வந்த இறைச்சி கடைகளுக்கு சீல் வைத்த நகராட்சி அலுவலர்கள், தடையை மீறி செயல்பட்ட இறைச்சி கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தும் உத்தரவிட்டுள்ளனர்.

மயிலாடுதுறை பகுதியின் பல்வேறு இடங்களில் ஊரடங்கு விதியை மீறி செயல்பட்டு வந்த இறைச்சி கடைகளுக்கு சீல் வைத்த நகராட்சி துறையினர், சுமார் 200 கிலோ அளவிலான கோழி மற்றும் ஆட்டு இறைச்சியையும் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க:கத்தியைக் காட்டிய சாமியார் - அடித்து துவைத்த ரஷ்ய பெண்!

ABOUT THE AUTHOR

...view details