தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’அமமுக பற்றி கேள்வி கேட்டா அடிப்பேன்’

விருதுநகர்: கேக்வி கேட்க வந்த செய்தியாளர்களை அடித்து விடுவேன் என மிரட்டிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ktr
ktr

By

Published : Mar 20, 2021, 3:20 PM IST

ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக தேர்தல் அலுவலகத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ”அமமுக பற்றி கேட்கிற மாதிரி இருந்தா இப்பவே கிளம்பிரு, இல்ல சத்துனு அடிச்சிடுவேன். தேவையில்லாத பிரச்சனையை இழுத்து விட்றீங்க. அதான் உங்களுக்கு பேட்டியே கொடுக்குறதில்ல” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

அமைச்சராக இருந்து கொண்டு பத்திரிகையாளர் சந்திப்பில், பத்திரிகையாளர்களையே அடித்து விடுவேன் என மிரட்டும் வகையில் ராஜேந்திர பாலாஜி பேசியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்தியுள்ளது.

’அமமுக பற்றி கேள்வி கேட்டா அடிச்சிடுவேன்’

இதையும் படிங்க: என் வெற்றி மீது நம்பிக்கை உள்ளது - நடிகை குஷ்பு

ABOUT THE AUTHOR

...view details